5140.

          சகல லோகபர காரக வாரக
          சபள யோகசர பூரக தாரக.

உரை:

     எல்லா வுலகங்களுக்கும் பரம காரணமாய் விளங்குபவனே சித்தி மிக்க யோகத்தின் சாரங்கள் அனைத்தும் மேவுதற்குக் காரணமாக இருப்பவனே.

     (77)