5143.

          பளித தீபக சோபித பாதா
          லளித ரூபக ஸ்தாபித நாதா.

உரை:

     பளிங்கின் ஒளி பொருந்திய திருவடியை உடையவனே; எளிதில் கண்டு தரிசிக்குமாறு திருவடியை ஸ்தாபிதம் செய்துகொண்ட பெருமானே.

     (80)