114. சம்போ சங்கர
சிந்து
அஃதாவது, சிவபெருமானாகிய சங்கரனுக்குச் சம்பு என்பதும் பெயராதலால், “சம்போ சங்கர” என்று கூறுகின்றார். சம்பு என்னும் இயற்பெயர் சம்போ என விளியேற்றது. 5156. தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.
உரை: குறுவம்பு - சிறு குற்றங்கள். மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம்கொழு கொம்பு - குறையும்படி நிறைவு செய்கின்ற சன்மார்க்க சங்கத்தார் போற்றுகின்ற நமக்குப் பற்றுக் கோடானவர். (1)
|