5158. நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி
உரை: அகன்ற மாட வீதிகளில் தடையின்றி நடந்து செல்லும் நன்மை பொருந்திய வேதியர்களுக்குத் தலைவனாகிய சிவன் நடம் புரிகின்ற நீதியை உடையவனும், நாள்தோறும் பல கலைகளை ஓதிச் சிவஞானம் அருளுபவனுமாகிய சிதாகாச சோதியானவன். (3)
|