5159. நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி
நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி
அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் ஜோதி.
உரை: நகப்பெருஞ் சோதி - கயிலை மலையால் விளக்கம் மிகுகின்ற சோதி ஆகியவன். நவப் பெருஞ் சோதி - நவந் தரும் பேதமாக விளங்கும் சோதியானவன். ஞானிகளின் அகத்தே பிரகாசம் பொருந்திய நடனத்தைச் செய்கின்ற பெரிய சோதியானவன். (4)
|