5160.

          உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
          அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவ சோதி.

உரை:

     உமாதேவிக்குத் தன் உடம்பில் பாதி கொடுத்து அருளும் நீதியை உடையவன். நவப் பெருவாதி - உமாதேவியோடு புதுமையாக நடனம் புரிபவன். அகத்திடும் ஆதி - மார்பின்கண் திருநீறு அணியும் அருளுருவாகிய சிவசோதி.

     (5)