5162.

     ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது
          ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
     சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது
          ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.

உரை:

     குற்றம் பொருந்தாததும், குற்ற உரைகளால் கலக்கப் படாததும், மயக்கப்படாததும், சூதுகளால் மாறுபடாததும், வேறு படாததும், குறையாததும் ஆகியது பெருஞ் சோதி.

     (7)