5164.

          அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி
          நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி.

உரை:

     அமல சபாபதி - குற்றமில்லாத சபாநாயகர். அமுத சபாபதி, ஞானாமுதத்தை நல்கும் சபாபதியாவார். நிமல சபாபதி - குற்றமில்லாத சபாநாயகர். நிபுண சபாபதி - எல்லாம் வல்ல சபாநாயகர். நிபிட சபாபதி - எங்கும் நெருங்கி நிறைந்துள்ள சபாபதி.

     (9)