5165.

          பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
          திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே.

உரை:

     பரநடம் சிதம்பர நடம் - மேலான ஞான நடனம் நிகழும் இடம் சிதம்பர நடனம். திருநடனம் குரு நடனம் - ஞானோபதேசம் பண்ணும் நடனம் குரு நடனம் எனப்படும். சிவாகாச நடனமாவது நவந்தரு பேத நடனம்.

     (10)