5167.

     அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
          அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
     தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
          சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.

உரை:

     ஐம்பொறிகளின் வசம் ஆகாமலும், அங்கு இங்கு என்னாதபடியும், வெவ்விய துயர் சேராதபடியும், மிக்க துயரம் சேராமலும், புரியட்டகமாகிய கஞ்சுகத்தோடு கலவாமலும், தமக்குத் துன்பத்தைத் தரக்கூடிய கொலை முதலிய குற்றங்களைச் சாராமலும் இன்பத்தைத் தருவாயாக சிவபெருமானே.

     (12)