5168.

  எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
       என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
  சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
      சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

உரை:

     எந்தையே என்று வேண்டினால் நீ வேண்டும் நலங்கள் இவை தரப் பெற்றுக்கொள் என்று இயம்புகின்ற அம்பலத்தில் ஆடுகின்ற திருவடி யன்றோ இந்தத் துன்பங்கள் எந்தக் காலத்தே நீங்கும் சந்தோடம் பெற வந்தாள் சங்கரனே.

     (13)