5169.

     நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
          நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
     தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
          சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

உரை:

     விஷமமே என்று சொல்லத்தக்க நம்முடைய கோபம் கெடுமாறு நற்பண்பு தந்தனை கெடாத அருளினை; அதிரகசியமான மந்திர வடிவானவனே; நெஞ்சின்கண் நிறைந்து விளங்குகின்ற பரமனே; பெருமானே உன் சிவபதியே எனக்குத் தஞ்சமாம் என்று வேண்டுபவர்க்கு வருத்தத்தைப் போக்கி இன்பம் தருபவனே.

     (14)