5173. வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண
வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல
ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கண அங்கண
நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர.
உரை: வானுலகத்து ஞான மயமான ஞானிகளின் கூட்டத்தில் மந்திர வாதங்களோடு கூடிய ஞான சிற்குண மந்திரங்களுக்கு வருபவனே; அன்புடைய நன்மக்கள் வழிபடுகின்றவனே; சிந்திக்கப் படுகின்ற அழகிய மங்கல குணம் பொருந்திய மங்கல மகளாகிய உமைக்குக் கணவனே; நல்ல மங்கல ஞான சுகபோகங்களைத் தருபவனே; கங்கர என்பது கங்கையைத் தலையில் உடையவனுமாம். நீதி பொருந்திய சற்குணங்களை நிரம்பினவனே; அழகிய சிவகணங்களுக்குத் தலைவனே; நாத தத்துவத்துக்கு மேலாகிய சிவாகாசத்தில் விளங்குபவனே; நமக்கெல்லாம் மேலான தலைவனே; தற்பரமாகிய உலகிற்குச் சிதம்பரமாக விளங்குபவனே. (18)
|