5175.

     பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு
          பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர
     சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர
          சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர.

உரை:

     திருவடி விரும்புகின்றவர்களின் பிறவிச் சங்கடங்களைப் போக்குகின்ற பரம்பொருள் எனவும், நடம்புரி பொருள் எனவும், என்னுடைய உள்ளத்தில் விருப்ப முண்டாக அருள்கின்ற பரம்பொருளே எனவும், வளைத்த பாதங்களை யுடைய பாத ஜதிகளால் அலங்கரிக்கப் படுகின்ற சிவசுந்தர சிவமந்திரங்களை யுடைய சிவசங்கரனே எனவும் போற்றப்படுபவரே.

     (20)