5176.

     கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்
          கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
     சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்
          சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.

உரை:

     மனஅலைச்சலை உண்டு பண்ணுகின்ற துன்பங்கள் நிதமும் மணிகள் இழைத்த பொற் சபையில் வழிபட நீங்குகின்ற கதியைத் தந்தருள்வாயாக; உடம்பொடு கூடியயோக சந்திரன் என்று புகழ்பவன் திருவடிகட்குச் சிவமே சரணம் குருவே சரணம்.

     (21)