115. சிவபோகம்
சிந்து
அஃதாவது, சிவயோகத்தால் பிறக்கும் சிவானந்த மகிழ்ச்சியைத் தெரிவிப்பது.
5178.
போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம் ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.
உரை:
சிவானந்த போகமே சிவ போகம்; அது நித்தியமானது; ஏகமானது; சத்தியமானது. (1)
(1)