5181. அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே
இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே.
உரை: அன்பு நிறைந்த மனத்தையே அம்பலமாகக் கொண்டிருப்பது விந்தையே ஆகும்; என் தந்தையின் தந்தையாகிய உன்னை எனக்குத் தாய் தந்தை என்று சொல்லுவேன்; எந்தை - எம்முடைய தாய். (4)
|