5182.

          ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே
          வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே.

உரை:

     சித்தி உலகம் என்னும் ஞான புரத்தை உடையவனே; நாத தத்துவத்திற்கு அப்பாற்பட்ட சத்தி தத்துவத்திற்கு மேலானவனே; வானத்தவர்கள் போற்றுகின்ற தகுதியை உடையவனே; விந்தைகள் பலவும் உடையவனே.

     (5)