5187.

          அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே
          துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே.

உரை:

     உடம்பின் கூறாகிய உமாதேவியைப் பங்கிலே உடைய ஆதிமுதல்வனே; தூய சோதி லிங்கமாகிய அங்கத்திலும் லிங்கமாக எழுந்தருளுகின்ற சோதி சொரூபனே; சுத்தமாகவும் ஞானமாகவும் ஓசை மயமாகவும் நிர்த்தனம் பண்ணுகின்ற சோதி சொரூபனே.

     (10)