5189. அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே
வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே.
உரை: அஞ்சுதல் வேண்டா என்று என் நெஞ்சின்கண் அமர்ந்தருளிய அழகனே; வஞ்சம் பொருந்திய நெஞ்சின்கண் உள்ள வஞ்சனைகளை உண்டருளிய அழகனே; வஞ்சனை செய்ய வந்த நஞ்சினை உண்டருளிய அழகிய கழுத்தை உடையவனே. (12)
|