5190.

          தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே.
          அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே.

உரை:

     அன்பர்கள் கண்டு விரும்பி உண்டு மகிழ்கின்ற இன்பத்தை உடையவனே; அண்டங்கள் எல்லாவற்றிலும் உள்ள தேவர்கள் விரும்பி மகிழ்கின்ற தேவனே.

     (13)