5193.

          எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே
          அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே.

உரை:

     அறிவால் எட்டிப் பார்க்க ஒட்டி நிற்கும் இட்ட மூர்த்தியே; யோகக் காட்சியின் அரை வட்டமும் முழு வட்டமும் இட்டுத் தோன்றிய சிவமூர்த்தியே.

     (16)