5195.
வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.
உரை:
கொடிய துன்பங்கள் கெட மெய்ம்மை புகன்ற தூயவனே; ஐம்பெரும் பூதங்களின் சேட்டைகள் கெடும்படி நின்ற உலகத்தில் உள்ளவர்கள் வாழச் செய்பவனே. (18)
(18)