5197.

          உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
          பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.

உரை:

     உரியதும் பெரியதும் வெளியதும் ஒளியதும் ஆகிய ஒளியைச் செய்கின்ற நடனத்தைப் புரிபவனே; அன்பும் பிரியமும் உடைய பெரியவர்களின் இதயத்தில் ஓதப்படுபவனே.

     (20)