5198.

          அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே
          அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே.

உரை:

     அகில புவனங்களில் உள்ள உயிர்கள் தழைக்கும்படி வரமருளும் அமல மூர்த்தியே; பிரமனும் திருமாலும் உருத்திரனும் மகிழும்படி நடனம் புரிபவனே.

     (21)