5200.

          தகரககன நடனகடன சகளவகள சரணமே
          சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே.

உரை:

     தகராகாசத்தில் நடனம் பண்ணுகின்ற பெரிய நடன மூர்த்தியாகிய சகள அகளமாய் விளங்குகின்ற சரணமே; குணங்களும் குணங்கள் இல்லாமலும் மிகுதி குறைவு இல்லாமலும் சமநிலையில் விதிக்கப்படுகின்ற திருவடிகளை உடையவனே.

     (23)