5201.

          அனகவனஜ அமிதஅமிர்த அசலஅகில கரணமே
          அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே.

உரை:

     அளவிறந்த யோக தாமரையில் ஊறுகின்ற சகலங்களையும் தன்னுள் கொண்டுள்ள அகில பரிபூரணப் பொருளே; ஒப்பற்ற தாமரையினுடைய நிலையில்லாத நீங்குகின்ற ஆகாசமாகிய பூத வடிவானவனே.

     (24)