5203.
உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.
உரை:
உள்ளமும் உணர்வும் உயிரும் ஒளிரும்படியாகப் பிரகாசிக்கின்ற திருவடியே; உருவில் அருவும் அருவில் உருவும் உடைய தலைவனே. (26)
(26)