5204.

          இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே
          இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.

உரை:

     இளகுகின்ற இதயத் தாமரையை இடமாகக் கொள்ளுகின்ற இறைவனே; இருமையில் ஒருமையும் நன்மையும் தருகின்ற சமூகமே.

     (27)