5205.
அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
உரை:
அடியும் முடியும் நடுவும் அறிய அரிய பெரிதாகிய திருவடியே; அடியவர்களுடைய இதயத் தாமரையில் நடனம் புரிகின்ற இறைவனே. (28)
(28)