5209. நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே
நினையும் எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே.
உரை: நினைவும் நினைவும் கலந்து இனிக்கின்ற நிறைவு தரும் பரம்பொருளே; நினைக்கின்ற மெய்யன்பர்கள் நிலைபெற நின்று நினைக்கு மாறு பொருந்துகின்ற கருத்தாவாகியவனே. (32)
|