5211.

          நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
          நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே.

உரை:

     மயங்குகின்ற என் நெஞ்சு கலங்கி நின்று வருந்தின என்னை ஆண்டவனே; விளங்குகின்ற ஒளி மிகுந்த ஞான சபையில் விளங்குகின்ற தாண்டவ மூர்த்தியே.

     (34)