5212.
மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா.
உரை:
மயங்கி நின்று வருந்துகின்ற என் நெஞ்சில் மயங்குமாறு சூது பேசுபவர்கள் சொற்கள் கொள்ளாதபடி அமைந்த பாதத்தை உடையவனே; வருந்துகின்ற என்னை ஆண்டவனே. (35)
(35)