5213.

          களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே
          களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே.

உரை:

     தப்பான வாதங்களைச் செய்கின்ற தீயவருடைய மனத்திற் கொள்ளாதவாறு செய்யும் திருவடியை உடையவனே; குற்றமில்லாத ஞானம் நிறைந்த பெரியோருடைய உள்ளத்தில் நிலவுகின்ற நாத மயமானவனே.

     (36)