5214. தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே
தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே.
உரை: நன்னெறியில் செல்லாதபடித் தடுத்துக் கொண்டிருந்த மனத்தின் தீமையைக் கெடுத்து நலம் பொருந்துமாறு அருளிய அன்பு மிக்க தந்தையே; தனித்த ஞானிகளின் திருவுள்ளத்தில் இனிமையுற நடித்த திருவடியைக் கொண்டவனே. (37)
|