5215. எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பலே
அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே.
உரை: நல்வினைப் போகத்தைப் பெருகக் காண்பித்து அதன் மேல் விருப்பத்தை ஊட்டி ஆசை உண்டு பண்ணும் இன்ப மூர்த்தியே; பிறவி அச்சத்தை ஓட்டி உலகியல் வாழ்வை அமைத்து நிலை பெறுவிக்கும் அன்பு மூர்த்தியே; வாழ்வை அமைவித்தலாவது சாவா வாழ்வைப் பெறுவித்தல். (38)
|