116. அம்பலத்தமுதே

கலி விருத்தம்

5218.

          நீடிய வேதம் தேடிய பாதம்
          நேடிய கீதம் பாடிய பாதம்
          ஆடிய போதம் கூடிய பாதம்
          ஆடிய பாதம் ஆடிய பாதம்.

உரை:

     நீடிய வேதம் - முடிவின்றி நீண்ட வேதங்கள். நேடிய கீதம் - நீண்ட கீர்த்தனங்களால் முடிவு காண முடியாத பாதம். ஆடிய போதம் - ஆடுதற் கமைந்த பாதம். கூடிய பாதம் - அன்பர்கள் சென்று தரிசிக்கும் திருவடி.

     (1)