5220. ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
ஒன்றிய பூதம் ஞான்றிய பாதம்
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
உரை: ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் - வேதங்களால் இயன்று மாமரமாகிய திருவடி. ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் - தோன்றுவிக்கப்பட்ட நாத தத்துவம் ஆகம ஞானங்கள் தோன்றியவாறாம். ஒன்றிய பூதம் ஞான்றிய பாதம் பூதங்கள் யாவையும் நிலைபெற்ற திருவடி. ஊன்றிய பாதம் - மண்ணுலகில் ஊன்றிய பாதம். (3)
|