5221. சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
உரை: சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் - நுகரப்படாது எஞ்சிய தீவினைகள் யாவும் தடுக்குமாறு நெஞ்சில் நிலைக்கின்ற திருவடி. தஞ்சிதமாகும் சஞ்சித பாதம் - தத்தமக்கு நன்மையாகவே முடிய வல்ல தங்கள் தங்கள் ஞான பதங்கள். கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம் எல்லோரும் இன்பமடையும் அழகிய பாதமாகும். குஞ்சித பாதம் - வளைந்த திருவடியே உயிர்களுக்கு நலம் புரிவதாகும். (4)
|