5222.

          எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
          எண்ணிய வாறே நண்ணிய பேறே
          புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
          புண்ணிய வானே புண்ணிய வானே.

உரை:

     எண்ணிய நானே - சிவனைத் தியானித்த நானே தியானத்தால் உறுதி உடையவனானேன். நண்ணிய பேறே - எண்ணின படியே நான் பெற்ற சிவபேறுகள் ஆயின. புண்ணியன் ஆனேன். சிவபுண்ணியம் உடையவன் ஆனேன். புண்ணியவானே - புண்ணியவனானேன்; சிவசாமிப்பியன் ஆனேன்.

     (5)