5223. தொத்திய சீரே பொத்திய பேரே
துத்திய பாவே பத்திய நாவே
சத்தியம் நானே நித்தியம் ஆனேன்
சத்திய வானே சத்திய வானே.
உரை: தொத்திய சீரே பொத்திய பேரே - தன்னோடு ஒட்டிய புகழே என்னோடு ஒட்டிய புகழாகும். துத்திய பாவே பத்திய நாவே - என் உள்ளத்தில் பாக்களே என்னிடம் பக்தி நிறைந்த சொற்களாகும். சத்தியம் நானே நித்தியன் ஆனேன் - சத்தியத் தன்மையும் நித்தியத் தன்மையும் உடையவன் ஆனேன். சத்தியவானே - சத்தியத்தையும் உடையவன் நானே. (6)
|