5224.

          எம்புலப் பகையே எம்புலத் துறவே
          எம்குலத் தவமே எம்குலச் சிவமே
          அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
          அம்பலத் தரசே அம்பலத் தரசே.

உரை:

     எம்புலப் பகையே எம்புலத் துறவே - என்னுடைய ஐம்புலன்களுக்குப் பகையாய் உள்ளனவற்றையே சிந்தைபால் தொடர்ந்து ஒழிந்தேன். எம்குலத் தவமே எம்குலச் சிவமே - எங்கள் குலத்தவர் போற்றுகின்ற சிவபெருமானே. அன்பினில் கனலே - அன்பு நெறியில் நெருப்புப் போல் துன்பத்தைப் போக்குபவனே.

     (7)