5225. இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.
உரை: இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே - எண்குணங்களையுடைய ஒளி பொருந்திய பெருமானே. எண்குணச் சுடரே இந்தகத் தொளியே - இந்த உலக மயக்கத்துக்கு ஒளி தருபவனே. அம்புயற் கிறையே - பிரமனாகிய தேவர்க்கு இறைவனே. (8)
|