117. திருநட மணியே
தாழிசை
5226. பசியாத அமுதே பகையாத பதியே
பகராத நிலையே பறையாத சுகமே
நசியாத பொருளே நலியாத உறவே
நடராஜ மணியே நடராஜ மணியே.
உரை: பசியாத அமுதே - உண்ணப் பசிக்காத அமுது போன்றவனே. பகராத நிலையே - எடுத்துரைக்க மாட்டாத பரம்பொருளே. பறையாத சுகமே - துன்பம் செய்யாத முதல்வனே. நசியாத பொருளே - கெடாத பொருளே. நலியாத உறவே - வருத்தாத உறவாக இருப்பவனே. (1)
|