5230.

     துதிவேத உறவே சுகபோத நறவே
          துனிதீரும் இடமே தனிஞான நடமே
     நதியார நிதியே அதிகார பதியே
          நடராஜ குருவே நடராஜ குருவே.

உரை:

     துதிவேத உறவே - வேதங்களால் துதிக்கப்படுகின்ற வேத ஞான உறவாகியவனே. சுகபோத நறவே - சி்வஞானமாகிய தேனே. துணி - வெறுப்பு. நதியார நிதியே - கங்கை நதி முதலிய உயர்ந்த நதிகளின் ஓரத்தில் ஒதுக்கப்படுகின்ற முத்து போல்பவனே.

     (5)