5233.

     அருளுறு வெளியே வெளியுறு பொருளே
          அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
     மருளறு தெருளே தெருளுறு மொளியே
          மறைமுடி மணியே மறைமுடி மணியே.

உரை:

     வெளியுறு பொருளே - அருட் பெருஞ் சோதி என்னும் ஆகாசத்தில் விளங்குகின்ற பரம்பொருளே. மருளறு பொருளே - மயக்கமற்ற தெளிபொருளே. தெருளுறும் ஒளியே - தெளிவுற்ற ஞான ஒளியே.

     (8)