5234.

     தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
          தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
     திருவளர் உருவே உருவளர் உயிரே
          திருநட மணியே திருநட மணியே.

உரை:

     தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே தடம்வளர் புனலே புனல்வளர் நலனே - குளிர்ந்த நிழலும் நிழல் தரும் குளிர் சுகமும் அதன் கீழ் உள்ள குளிர் தண்ணீரும் போல்பவனே.

     (9)