5243. தூய சதாகதியே நேய சதாசிவமே
சோம சிகாமணியே வாம உமாபதியே
ஞாய பராகரமே காய புராதரமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
உரை: சதா காலமும் இன்ப கதியைத் தருபவனே; ஞான மயமான சதாசிவமே; சந்திரனைத் தலையிலே சூடியவனும் இடப்பாகத்தே உமாதேவியை உடையவனுமாகிய சிவமே; ஞானமாகிய மேலான இடமே; உடம்பாகிய புறத்தை எரித்தவனே. (3)
|