5244.

     ஆரண ஞாபகமே பூரண சோபனமே
          ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே
     நாரண னாதரமே காரண மேபரமே
          ஞான சபாபதியே ஞான சபாபதியே.

உரை:

     வேத ஞானம் ஆனவனே; முழுதுமாகிய சுமங்கலமே; அனாதியும் அனாதிவேதனும் ஆனவனே; நிறைந்த அழகே; ஆதியும் அனாதியும் வேத ஞான அனாதியும் ஆனவனே; நாராயணனுக்கு ஆதாரமானவனே; எல்லாப் பொருட்குக் காரணமாகவும் மேலாகவும் இருப்பவனே.

     (4)