5245.
ஆகம போதகமே யாதர வேதகமே ஆமய மோசனமே ஆரமு தாகரமே நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.
உரை:
சிவாகம ஞான வடிவானவனே; எல்லாப் பொருட்கும் ஆதரவாக இருப்பவனே; துன்ப நீக்கமே; நிறைந்த ஞான அமுதிற்கு இடமானவனே; நாக லோகத்தவர்க்கு நாயகனே. (5)
(5)